முகப்பு

 சோழா அன்பில் சிகரம் ,ஈரானில் இப்படி ஒரு பெயரில் கோயில்

சோழா அன்பில் சிகரம்

ஈரானில் இப்படி ஒரு பெயரில் கோயில்


ஈழ நாட்டின் மன்னன் நாப்பிரசு கட்டுவித்த ஈழநாட்டின் பெரிய கடவுளுடைய கோயில் சோழா அன்பில் சிகரம். ஈழ மக்களின் பெரிய கடவுளான ஈசர் நாபாப்பயர் என்பவருக்காக கட்டப்பட்ட ஆலயம் இது. இன்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக பராமரித்து வருகிறது. இந்த ஆலயத்தை அமைத்த மன்னன் நாப்பிரசு நீதியின் குறியீடாக அந்த ராஜ்ஜியத்தின் வரலாற்றில் குறிக்கப்படுகின்றான். நாம் மனுநீதிச் சோழன் என்று சொல்வதுபோல் அங்கே நாப்பிரசு(நாப்பிரசு மன்னனின் மகன் பெயர் கும்பன்)


இன்றைய ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது இந்த பெரிய கோயில். சோழா அன்பில் சிகரம் என்று நான் கூறியதால் பலர் அப்படியா பெயர் உள்ளது என்று நினைக்கலாம். ஆம், அவர்கள் "சோஹா ஸ்அன்பில் சிக்குராட்" என்றே இன்றும் அழைக்கிறார்கள். (இன்றைய பார்சிகளின் மொழியில் ழகரம் இல்லை, அவர்களின் மொழியில் இதற்கு எந்தப் பொருளும் இல்லை)


சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆலய சிகரம் 350அடி உயரம் வரை இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட நிலையில் 80 அடிக்கு மேல் இன்றும் உள்ளது. நீள அகலம் 174 அடி வீதம் உள்ளது.


இந்தப் பெரிய கடவுளான நாபாப்பயரின் மகன் கடவுளின் பெயர் எழில் என்பது இன்னுமொரு ஆச்சரியம்(எழில் என்பது முருகனைக் குறிக்கும் பெயர்). 


தமிழகத்தில் வாழும் வெள்ளார்கள் தங்களை ஈழவர்கள் என்று குறிப்பிடுவார்கள். அவர்களின் வெள்ளாளர் புராணத்தில் தாங்கள் ருத்திரனின் வம்சம் என்றும் ஈழநாட்டில் இருந்து இங்கு குடியேறியதாகவும் கூறுகின்றார்கள். 


தமிழ் நாட்டில் வாழும் பலரும் தமிழை தவறாக உச்சரிக்கையில் இந்த ஈழவர்கள் தமிழை சரியாக உச்சரிப்பதும் , தமிழ்நாட்டில் குறித்த சில சமூகத்தை தவிர ஏனையவர்களுக்கு தமிழ் மீது வெறுப்பு இருப்பதும், ஈழவர் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் பல இனங்கள் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(கேரளாவில் ஈழவர், கர்னாடாவில் ஈடிகா, இலங்கையில் நாட்டிற்கே ஈழம் என்று பெயரிட்டார்கள்)












Ourhome Div Pictures, Images and Photos

0 கருத்துகள்: