முகப்பு

வளரும் தமிழ் மூடர்கள்

இது தமிழ்நாட்டில் உள்ள பலரையும் போல் ஆங்கில/ஆங்கிலேய அடிமைத்தனத்தில் சிக்குண்டு பின் அதில் இருந்து தன் சுயஅறிவினால் மீண்ட ஒரு தமிழனின் குமுறல், ஆனால் இவன் இப்பபொழுதெல்லாம் எழுதுவதாக தெரியவில்லை ஏனோ..? உண்மையை சொல்லும்போது பலருக்கும் பிடிப்பதில்லை அதனாலோ...? இல்லை எப்படிச்சொன்னாலும் தமிழ்நாட்டின் விருந்தாளிக்கு பிறந்தவர்களுக்கு புரியாது என நினைத்தா யாம் அறியோம்...
இது அந்த முன்னாள் மூடனின் வலைப்பூ http://veerathamizh.blogspot.com/

வளரும் தமிழ் மூடர்கள்
(இந்த கட்டுரை எழுதிய ஆண்டு 1998)


பிறந்த நாளிலிருந்து நான் தமிழ் காற்றை சுவாசிக்கிறேன். தமிழ்
மண்ணில் தவழ்ந்து நடக்கக் கற்றேன். என் தாயாரிடம் நான் முதலில்
கற்ற வார்த்தை "மம்மி". பிறகு நான் அழைக்க கற்றுக் கொண்டது
"டாடி".

அகர முதல எழுத்தை விட எனக்கு "twinkile twinkle little star.." கற்றுக்
கொடுத்தார்கள். எங்கள் பக்கத்து வீட்டு மேதாவி "what is your name ?"
என்பதற்கு நான் "my name is george bush" என்று நான் எனக்கு கற்று
கொடுத்ததை கூறியவுடன் அவர் என்னை "very very goooooooddd..." என்று
உற்சாகப் படுத்தியவுடன் மகிழ்ந்து போனேன்.

"matriculation school" தந்த "அறிவு ஒளி" யால் தாமஸ் ஆல்வா எடிசன்
எவ்வளவு பெரிய மேதாவி என்றறிந்தேன். அமெரிக்கர்களின் விண்வெளி
சாதனைகளையும் அணுவை பிளந்து சக்தி பெற்றதையும் கண்டு வியந்தேன்.
அந்த சொர்க்க நாட்டிற்கு செல்ல ஏராளமான ஏக்கத்தை நம்
சமுதாயத்தில் பெற்றேன்.

இந்தியாவிலிருந்து வீசிய கணிப்பொறி காற்றில் ஓர் தூசியாக நானும்
அமெரிக்கா சென்றேன்.

ஆகா... என்னே மேலை நாட்டவர்களின் திறமை ? அவர்களின்
அறிவுத்திறனென்ன... எதை செய்தாலும் அதை சிறப்பாகச் செய்வதில்
ஈடுஇணையுண்டோ ? மேலை நாடுகளில் வாழ்பவர்கள் பாக்கியவான்கள்.
நம் நாட்டில் வாழ்பவர்கள் துர்அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணிணேன்.

காலம் சுழன்றது. என் மனப்பக்குவம் வளரத் தொடங்கியது.

உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினேன். ஒவ்வொரு மனித
கூட்டத்தின் குணங்களை உணரத் தொடங்கினேன்.

நம் நாட்டில் நம் முன்னோர்கள் 5000 ஆண்டிற்கும் மேல் வாழ்ந்த
வாழ்க்கையின் அனுபவத்தினை உணர்ந்தேன். அமெரிக்கர்கள் வெறும்
400 ஆண்டுகளில் கட்டிய உலகத்தையும் அறிந்து கொண்டேன்.
அவர்களின் ஆதிக்க வெறி, பொருளாதாரத்தை வைத்து உலகை
ஏமாற்றும் விதம் போன்ற அமெரிக்கர்களின் மறு பக்கத்தை பார்க்க
ஆரம்பித்தேன்.

என் பிறப்பின் சிறப்பையும், என் குலத்தின் பெருமையையும் உணரத்
தொடங்கினேன். நான் வளர்ந்து வந்த பாதையைப் பார்த்து மனம்
குமுறினேன்.

முதலில் george bush என்ற என் பெயரை அகத்தியன் என்று மாற்றினேன்.
தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கண இலக்கியங்கள் எடுத்து வந்து
கற்க ஆரம்பித்தேன். என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இனி
தமிழின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதென தீர்மானித்து இப்போது
செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழ் தந்த காற்றை சுவாசித்த நான் ஆங்கிலம், சீனம் போன்ற பிற
மொழி பயின்றாலும் என் இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழின்
முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, பிறர்க்கும் முன்னோடியாக திகழவேண்டும்
என்பதை மனதில் தின்னமாக வைத்துக் கொண்டேன்.

ஆனால், இந்த பொழுது, என்னைப் போல் அறியாமையினால்
வளர்ந்து கொண்டிருக்கும் பற்பல தமிழர்களை எண்ணினால் மிகவும்
வருத்தமாக இருக்கிறது. பணத்திற்காகவும், அறியாமையினாலும்
அவர்களை வளர்த்து விடுபவர்களை எண்ணினால் கோபம் வருகிறது.
ஆனாலும், என்னைப்போல் அவர்களும் ஒரு நாள் வரலாற்றின்
கதவுகளைத் திறந்து பார்க்கும் போது உண்மை உணர்வார்கள் என்ற
நம்பிக்கையோடு இன்று இரவு படுக்கைகுச் செல்கிறேன்.

அகத்தியன்.


(இந்த கட்டுரை எழுதி இப்போது 12 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது தமிழ் நாடு முழுவதையும் ஆங்கிலம் பேச வைத்து முட்டாள் தேசமாக மாற்றிவிட்டார்கள்)
Ourhome Div Pictures, Images and Photos

ஈழத்தமிழர் மீது பிராமணருக்கு என்ன கோபம்?

இந்தியாவில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு தொடர்பாக பொதுவாக பலராலும் வைக்கப்படும் குற்றச்சாட்டு பிராமணர்கள் (அவர்களை இழிவுபடுத்துவதற்காக பார்ப்பனர் என்று எழுதுவார்கள்) ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்றும் அதற்கான காரணமாக பிராமணரை ஆரியர் என்றும், அவர்கள் ஆரிய திராவிட விரோதத்தில் ஆரிய சிங்களவருடன் கூட்டுச்சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயற்படுகிரார்கள் என்றும் கூறப்படுகின்றது. இது ஈழத்தின் சமூக அமைப்பு பற்றிய தெளிவின்மையே என நான் நினைக்கின்றேன்.

ஈழத்து சமூக அமைப்பு இந்திய சமூகத்தைப் போலவே சாதிய அடிப்படையில் இறுகிய கட்டமைப்பை கொண்டிருந்தது/கொண்டிருக்கின்றது, ஆனால் இது இந்திய சாதி அமைப்பிலிருந்து சற்று வேறுபட்ட அமைப்பை கொண்டுள்ளது. அதாவது இந்திய சாதி அமைப்பானது பிராமணர்களினது சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் இடங்கொடுத்து உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களின் உழைப்பில் வயிறு வளர்த்து பின் அவர்களையே அடக்கி ஆண்டு அவர்களை கீழ்சாதி என்றும் ஏமாற்றத்தக்க பிரமணர்களுக்கு ஏய்க்க ஏதுவான சமூக அமைப்புடையது.

ஆனால் ஈழத்து சமூக அமைப்பானது நில உடமையையும், உழைப்பையும் சைவதமிழ் பண்பாட்டையும் பேணிக்காக்கும் வேளாளர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, இங்கு பிராமணர்களின் கை ஓங்குவதற்கு ஒரு போதும் வழி இருப்பதில்லை.
மற்றும் ஈழத்தின் சாதிபடிநிலை விகிதாசாரத்தில் வேளாளர்கள் அதிகமாகவும் மற்றய சாதிகள் சிறிய அளவிலும்(தலைகீழ் பிரமிட்டு வடிவம் என்று கூறுவார்கள்) வேளார்களின் தேவைகளுக்கான குடிமைத்தொழில்களுக்கு தேவையான அளவிலும் காணப்படும். இந்த நிலையில் பிராமணர்களும் வேளாளர்களின் குடிமைத்தொழில் செய்பவர்களே.

இந்த நிலை பெரும்பாலான இந்திய பிராமணர்களும் அறிந்ததே, ஏனெனில் ஈழத்தில் குடிமைத்தொழிலுக்கு போதுமானவர்கள் இல்லாவிடில் இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்படுவார்கள், அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்களே ஈழத்தில் உள்ள அம்பட்டர், வண்ணார், பிராமணர், பறையர், சக்கிலியர், தச்சர், கொல்லர், நட்டுவர் போன்ற பெரும்பாலான குடிமைத்தொழில் குழுக்கள்.

இந்தியா முழுவதும் மற்றவர்களை ஏமாற்றி வாழ்ந்த பிராமணர்களுக்கு ஈழத்தில் தமது நிலைகுறித்து கோபம் அல்லது விரக்தி ஏற்படுவது இயற்கையே, இந்த நிலைதான் பிராமணர்களின் ஈழத்து வேளாளர் சமூகத்தின் மீதான கோபம் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் மீதான கோபமாக காட்டப்படுவதற்கான காரணியாகவும், யதார்த்தமாகவும் அமைந்ததே அன்றி அவர்களின் ஆரிய மாயை அன்று. இது நான் தமிழகத்தில் இருந்த காலத்தில் பல பிராமணர்களின் பேச்சில் கண்ட உண்மை. நீங்களும் இனிமேல் அவதானித்து பாருங்கள், நான் சொல்வது உண்மையா என....

முன்னைய பதிவை பலரிடமும் கொண்டு சென்ற தமிழ்10 க்கு நன்றி.
ஓட்டுப்போட்டவர்களுக்கும் நன்றி, மறக்காம இந்தப்பதிவுக்கும் ஓட்டுப்போடுங்க, அதோடு உங்க கருத்தையும் போடுங்க.
Ourhome Div Pictures, Images and Photos

ஈழத்தமிழர் யார்?

நான் தமிழகத்தில் நீண்டகாலம் இருந்தவன் என்ற வகையில் தமிழகத்தின் பல பாகங்களுக்கும் சென்று அங்குள்ள கல்விமான்களையும்(மான்கள் மேயும் போது), அறிவாளிகளையும்(அறிவை ஆழிக்குள் வைத்துவிட்டு வெறுமையாக இருப்பவர்கள்), அரசியல் வியாதிகளையும் மன்னிக்கவும் வாதிகளையும் சந்தித்திருக்கிறேன். அப்படி சந்தித்து பேசும் போதெல்லாம் நான் ஈழத்தமிழன் என்ற காரணத்தால் ஏதாவது ஒரு வகையில் ஈழம் தொடர்பான பேச்சு வந்துவிடும். அப்போது அவர்களின் பேச்சில் காணப்படும் ஈழம் தொடர்பான அறிவை கண்டு வியந்திருக்கிறேன். ஆமாங்க அவ்வளவு அறியாமையோடு பேசுவார்கள். அப்பொழுது அவர்களுக்கு விளக்கஞ் சொல்லியே நான் மாய்ந்து போயிருக்கிறேன். எனவேதான் வலைப்பதிவை படிப்பவர்களாவது கொஞ்சமாவது இலங்கையில் உள்ள தமிழர் பற்றி அறியும் நோக்கில் இப்பதிவை போட எண்ணினேன்.

நான் சந்தித்த பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு விடையை இப்பதிவில் இடுகிறேன்.
இலங்கை சிங்களவர்களின் நாடு, இங்கிருந்து பிழைக்கப்போன இடத்தில் பிரச்சனை பண்ணினால் சிங்களவன் சும்மா இருப் பானா?
இது பலரும் என்னிம் கேட்கும் கேள்வி...

இலங்கையில் பிழைக்க வந்த தமிழன் பிரச்சனை பண்ணவில்லை அவன் இந்திய தமிழனுக்கே உரிய அடிமைத்தனத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக கொத்தடிமையாகவே இலங்கையின் மத்திய மலைநாட்டின் தேயிலைத்தோட்டங்களில் அடிமைப்பட்டுக்கிடக்கிறான். உரிமை வேண்டி போராடுபவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியை தமது தாயகமாக கொண்டு வரலாற்று காலந் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள்.

ஆம், இலங்கையில் இரு வேறுபட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
1.இலங்கையை தமது பூர்வீக தாயகமாகக் கொண்ட தமிழர்கள், இவர்களே தம்மை மற்ற தமிழர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட தம்மை ஈழத்தமிழர் என அழைக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

2.இந்திய வம்சாவழித் தமிழர்கள், இவர்கள்தான் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டில் இருந்து கூலித்தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததியினர். இந்திய வம்சாவழியினர் என்று கூறுவதை அவமானமாகக் கருதும் இவர்கள் தம்மை மலையகத்தமிழர்கள் என்று அழைக்கின்றனர்.இவர்கள் இலங்கையின் மத்தியமாகாணத்தில் நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். கணிசமான அளவினர் தலைநகர் கொழும்பிலும் வசிக்கிறார்கள். கொழும்பில் வசிக்கும் இந்திய தமிழர்களில் கூலித்தொழிலாளர்களாக வந்தவர்கள் மட்டுமல்லாது வியாபாரிகளாக வந்தவர்களும் அடக்கம்.

இவர்களைத் தவிர இராசராச சோழனின் படையெடுப்புடன் இலங்கையில் குடியேறிய சோழனின் படைக்குடிகள் அனுராதபுரம்,பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் இன்னும் சிறிதளவு மக்கள் தமிழர்களாகவே வாழ்கிறார்கள்.
சிலர் முன்னர் ஏற்பட்ட கலவரங்களில் இடம்பெயர்ந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர், பலர் சிங்களவர்களாக மாறி விட்டனர்.

இப்பதிவு இலங்கையில் உள்ள தமிழர் பற்றிய அறிமுகம் மட்டுமே, உங்களின் ஆதரவைப் பொறுத்து தொடர்ந்து எழுதுவேன், கருத்தை பின்னூட்டத்தில் இடுங்கள். மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்.
Ourhome Div Pictures, Images and Photos