முகப்பு

ஈரானியர்கள் எனப்படும் இரணியர்கள்

எம்மில் பெரும்பாலானவர்கள் இரணியன் என்ற சொல்லை கேட்டிருப்போம், ஆனால் அதன் அர்த்தம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

இரண்ய என்றால் சமஸ்கிருதத்தில் பொன்னிறமான என்று அர்த்தம்.

பிரம்மன் பொன்னிறமான முட்டை வடிவ கர்ப்பத்தில் இருந்து வெடித்து தோன்றியவன் என்று பிரபஞ்ச படைப்பைப் பற்றி வேதம் சொல்லும். அதனால் பிரம்மனுக்கு இரண்யகர்பன் என்றும் ஒருபெயர் உண்டு.

(ஆதிபராசக்தியால் கர்ப்பத்தில் பிறந்தவன் பிரம்மன், ஆதிபராசக்தியில் இருந்து பிரம்மம் தோன்ற ஆதாரமாக இருப்பது சிவம் என்கிறது வேதம். அவனிடம் இந்த பிரம்மத்தில் உண்டாக்குவதற்கு தேவையான எல்லா ஐஸ்வர்யங்களும் இருப்பதால் அவனை ஈஸ்வரன் என்கிறது வேதம்.)


இந்த பொன்னிற ஒறியை தரும் ஆதித்தர்களை மித்திரர்கள் என்று வேதம் கூறும்.

வானில் தோன்றும் மின்னல், சூரியன், அக்னி போன்றவர்கள் இரணியனை உண்டாக்கும் மித்திரர்கள் என்கிறது வேதம்.

பண்டைய ஆன்மீக அறிவுபெற்ற ஆரிய மக்கள் கடவுளை வணங்குவதில்லை. அவர்களின் ஆன்மீக பார்வையில் கடவுள் கர்மங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரே மூலமானவர். ஞானத்தை உணர்த்துபவர். 

உலக வாழ்வை துறந்தவர்களே கடவுளை நோக்கி மௌனநிலையில் ஞானத்தை உணர்ந்தனர்.

சாதாரண உலக வாழ்க்கையில் இருந்த மக்கள் வணங்கியதெல்லாம் தங்கள் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்தும் ஆதித்தர்கள், தேவர்கள், பூதங்கள் என்பவற்றையே.

அவ்வாறு பண்டைய ஆரியர்கள் வணங்கிய ஆதித்தர்களில் ஒருவனே இரணியனை உண்டாக்கும் மித்திரர்கள்.

ஆனால், ஆரியர்கள் ஆதித்தர் என்று வணங்கிய மித்திரர்களை முழுமுதற் கடவுளாக கருதி வழிபட்டார்கள் பாரசீகர்கள். 

மித்திரர்களால் உண்டாக்கபடும் ஒளியை அதாவது இரணியனை கடவுளான கருதி வழிபட்டார்கள். 

இது ஆரியர்களின் ஆன்மீக அறிவிற்கும் கடவுட் கோட்பாட்டிற்கும் முரணானது.

அதனால் பாரசீகத்தில் வாழ்ந்த ஒளியை வணங்குபவர்களை இரணிய வழிபாட்டை உடையவர்கள் எனும் பொருளில் இரணியர்கள் என்று அழைத்தார்கள் ஆரியர்கள்.

ஈரானியர்கள் என்பது இரணியர்கள் என்பதன் திரிபே.

ஈரானியர்கள் என்பதற்கும் ஆரியர்கள் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


ஈரானியர்கள்_எனப்படும்_இரணியர்கள்

வரலாற்றை அறிவோம்..

அஞ்ஞான இருளை நீக்குவோம்..




Ourhome Div Pictures, Images and Photos

0 கருத்துகள்: