முகப்பு

எதிர்ப்பின் தாய்-மெகாடிலிலி வா மென்சா

மெகாடிலிலி வா மென்சா ஒரு தீர்க்கதரிசி மற்றும் அச்சமற்ற போர்வீரர் ஆவார், அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய தனது கிரியாமா மக்களை வழிநடத்தினார். 1860 களில் பிறந்த அவர், ஏகாதிபத்திய கொள்கைகள் மற்றும் அவர்களை அடிபணியச் செய்ய முயற்சித்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகியை அறைந்ததற்காக நினைவுகூரப்படுகிறார். 

மெகாட்டிலிலி வா மென்சா, எதிர்ப்பின் தாய், கென்யாவைச் சேர்ந்த ஒரு கதாநாயகி, அவர் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து போராடினார். 

அவள் ஒருமுறை சொன்னாள், "உண்மையைப் பேசுவதற்கும், என் மக்களுக்காகப் போராடுவதற்கும் நான் பயப்படவில்லை. எனது சக்திகள் நம் முன்னோர்களின் ஆன்மாவில் வேரூன்றிய காயாவிடமிருந்து வருகிறது"என்று. அவர் ஒரு புகழ்பெற்ற அச்சமற்ற தலைவராக இருந்தார் மற்றும் அவர்களின் நிலத்தின் மீதான வெள்ளை ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தனது கிரியாமா மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தார். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான கிரியாமா எழுச்சியை அவர் வழிநடத்தினார்.

மக்களிடம் இருந்து பெரிய விளை நிலங்களை திருடி, மக்களிடம் வரி வசூல் செய்து, உள்ளூர் பாம் ஒயினுக்கு தடை விதித்த காலனித்துவ அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு, கட்டாய உழைப்பை வழங்குவதற்கு மக்களை நிர்ப்பந்தித்த காலனித்துவ அரசுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்காக இறுதிச் சடங்குகளின் போது நிகழ்த்தப்பட்ட கிஃபுடு நடனத்தை மெகடிலிலி பயன்படுத்தினார். அவளைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சமூகத்திற்காகவும், தங்கள் நிலங்களுக்காகவும் போராட அவர்களைக் கட்டியெழுப்ப உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

முதன்முறையாக அவள் வெள்ளையர்களால் பிடிக்கப்பட்டு கிசி கென்யாவில் தடுத்து வைக்கப்பட்டாள், அங்கு அவள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தாள், சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்தது. 

இரண்டாவது முறையாக அவள் சோமாலியில் கிஸ்மாயுவில் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டாள், ஆனால் அவள் இப்போதும் தப்பிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தாள், விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தது. 

அவர் 1925 இல் இறந்தார். மலிந்தி மாவட்டத்தில் உள்ள பங்கலே உலயா குவா ஜெலேயில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவரது நினைவாக ஒரு கலாச்சார விழா நடத்தப்பட்டது.

 #ஆபிரிக்க_மக்களின்_கருப்பு_வரலாறு



Ourhome Div Pictures, Images and Photos

இந்தோ ஐரோப்பிய இனம் என்பது சரியா?

 பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவில் கறுப்பர்கள் தான் வாழ்ந்தார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். 


எட்டாயிரம் ஆண்டுகள் பழைமையான ரிக் வேதம் தோல் வெள்ளையாக மாறும் நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றும், அதற்கு அஸ்வினி தேவர்கள் வைத்தியம் செய்து குணப்படுத்தினார்கள் என்றும் குறிப்பிடுகிறது.

தோல் வெள்ளையாக மாறுவதை மாற்றும் வைத்தியம் தெரியாதவர்கள் வெள்ளயாக மாறினார்கள். ஆபிரிக்கர்கள் ஐரோப்பியர்கள் இருவரும் ஒரே இனத்தவர்கள். ஆபிரிக்கர்கள் வெள்ளை தோல் நோயினால் பாதிக்கப்பட்டால் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

ஐரோப்பிய வெள்ளை நீக்கிரோக்கள் அந்த குற்ற உணர்ச்சியை மறைக்கவே தம்மை இந்தோ ஐரோப்பிய இனத்தவர்கள் என்று இந்திய இனத்துடன் தம்மை தொடர்பு படுத்தி, தம் இன வரையறைகளை வகுத்தார்கள்.

ஐரோப்பிய வெள்ளை நீக்ரோ இனத்திற்கும் இந்திய இனத்திற்கும் என்ன சம்பந்தம்? 

ஐரோப்பிய ஈரானிய இனங்களாக இல்லாமல், இந்தோ ஐரோப்பிய இனங்கள் எப்படி ஐரோப்பாவில் பெரும்பான்மையாக இருக்க முடியும்? 

இந்தியா எங்கே இருக்கிறது என்று தெரியாமல், இந்தியாவை கண்டடைவதையே வாழ்நாள் லட்சியமாக கொண்ட ஐரோப்பியர்கள்; அன்றே இந்தியாவுடன் வான்வழிப் பாதையால் தொடர்பு கொண்டு இந்தோ ஐரோப்பிய இனத்தை உருவாக்கினார்களா?

யாரை ஏமாற்றுகிறது இந்த வெள்ளை நீக்ரோ கூட்டம்?

Ourhome Div Pictures, Images and Photos

காளைத்திகைப்பான் குறள்-புல்டோசர் பாபா அருளால்

வெள்ளிக் கிழமை கல்லெறியின் சனிக்கிழமை 
கல்கல்லாய் உதிருமுன் வீடு.                           1

கல்லறியார் கல்லெறியின் எறிந்தவன்தன் வீடு 
கல்கல்லாய் ஆகும் நாளை                               2

கலவரத்தைச் செய்து நிலவரத்தை நீமாற்றில் 
நாளை காளைத்திகைப்பான்  வரும்             3

அறுவார் உசுப்பேற்றி அறியாமல் நீயெறிந்த 
கல்லாக மாறுமுன் வீடு                                       4

எறிவர் மகிழ்வர் கலம்செய்து களித்திருப்பர் 
மறுநாளே மனம் வருந்துவர்                             5

காளைத் திகைப்பான் வேலை தொடங்குகையில் 
கலங்கிவிடும் கலவரன் மனம்                          6

கலவரன் வீடு கல்லாகும் என்றறியின் 
கல்தொடவே கைகள் நடுங்கும்                        7

கலகத்தைத் தூண்டி சிதைத்தவன் சொத்தெதுவோ 
ஏலத்தே ஏறி விடும்                                                8

கலவரம் செய்துவிட்டு மனதளவில் மகிழ்ந்தநாளை 
காளைத் திகைப்பான் வரும்                              9

காளைத் திகைப்பான் காலனாய் வராதிருக்க 
கலகங்கள் செய்யா இரு                                    10

(அருஞ்சொல்: காளைதிகைப்பான்-புல்டோசர்)

Ourhome Div Pictures, Images and Photos

தமிழின் சிறப்பு- சிறவர் பேச்சு

வரலாற்றுக்கு எட்டா தொன்மையானது தமிழ், பாற்கடல் அமிர்தமென பொங்கிநிற்கும் பெருஞ்சிறப்பு அதன் சிறப்பு. கடல்மறைய திரள் சிறப்பின் சிறுதுளியை ருசிபார்க்க வந்திருக்கும் சிறியேனின் வணக்கங்கள்.

இவ்வுலகில் கிட்டத்தட்ட எண்ணாயிரம் மொழிகளாம். இருந்தாலும் ஆறு மொழிகளே தொன்மையும் சிறப்பும் வாய்ந்தவை என்று மொழியியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இவற்றிலும் பல வழக்கொழிந்து போயிற்று. 

உலகில் பல மொழிகள் பேச்சுவழக்கோடு தோன்றி மறைந்து போயிற்று. சில மொழிகள் எழுத்து வழக்கில் மாத்திரம் இன்னமும் உயிர்வாழ்கின்றது. ஆனால் நம் தாய் மொழியான தமிழ் மொழி மட்டுமே காலங்கள் கடந்தும், எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இளமையுடனும், தெளிவுடனும், பொலிவுடனும் பல்லாண்டு வாழும் பரம்பொருளாய் நிலைத்து நிற்கின்றது.

சீரிளமை பொருந்திய எம் செந்தமிழ் தொன்மை எளிமை இனிமை வளமை நுண்மை செழுமை என்று பல பெருமைகளுடன் தனித்தன்மை வாய்ந்ததாக பூவுலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

கடல்வந்து பிரிக்காத ஈழம்சேர் அகண்ட பாரதமே தமிழின் பிறப்பிடம். உலகாளும் ஈசனில் உருவான முருகனே தமிழ்க்கடவுள். இறைவனே காத்து நிற்பதால் தமிழை இறைமொழி என்றும், இறைவழி பற்றிய அகத்தியரும், அவர் வழி பற்றிய தொல்காப்பியரும் இலக்கண வேலியிட்டு அழகுபடுத்தியதால் அருள் மொழி என்றும் புகழுரைப்பர் சான்றோர். 

தமிழுக்கு மட்டுமல்லாது தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். உளவியல் உயிரியல் தொடங்கி உலகியல்வரை வகுத்தவர் தொல்காப்பியர். இன்றுவரை பல இனங்கள் தம் மொழிகளை இலக்கணப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்க, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கண இலக்கிய வரங்களைப் பெற்றவர்கள் நாங்கள்.

இதற்காகவே ஒவ்வொரு தமிழர்களும் பெருமிதம் கொள்ளலாம். ஐயாயிரம் ஆண்டுகள் கடந்த அப்பழுக்கற்ற ஒரு நூல் தமிழர்க்கன்றி உலகில் எவருக்குண்டு?

கணித அடிப்படையில் ஒலிக்கும் எழுத்துக்கும் நெடுங்கணக்கு அமைத்தவர்கள் எம் முன்னோர்கள். மூச்சு முட்டாமல், தொக்கி நிற்காமல் , இடையூறு இல்லாமல் இயல்பாகவும் இனிமையாகவும் பெருமுயற்சியின்றி உச்சரிக்கக்கூடிய பெருஞ்சிறப்பும் தமிழையும், தமிழின் அத்தனை சொற்களையுமே சாரும்.

வாழும் நிலத்தை ஐந்தாகவும், வீசும் காற்றை நான்காகவும், இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் என்று மூன்றாகவும் பிரித்துக் தமிழைக் கொண்டாடியவன், காலங்கள் தோறும் சங்கங்கள் அமைத்து தமிழ் மொழியையும் அதன் சிறப்பையும் போற்றினான்.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் போற்றி வளர்த்த தமிழ், அகம் புறம் என்றும் இதிகாசங்கள் புராணங்கள் என்றும் இன்றும் வாழ்கின்றது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட மொழி தமிழே. உலகிலுள்ள அத்தனை மொழிகளுக்கும் தாயாய் தயையாய் விளங்குகிறது தமிழ். உலகின் பல மொழிகளுக்கு வேர்ச்சொற்களை கொடுத்தும், உலகின் நவீன மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருக்களை கொடுத்ததும் தமிழின் பெருஞ்சிறப்பாகும்.

உலகின் அன்றைய மனிதர்கள் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு குறியீடு கொண்டு குறிக்க முனைந்தார்கள். அக்காலத்திலேயே, ஒலிப்பு முறை ஒவ்வொன்றுக்கும் உருவம் கொடுத்து ஒலிப்புக்கு எழுத்துரு என்ற உன்னத நிலையை பெற்றவர்கள் தமிழர்கள். இன்றைய நிலையில் தமிழ் எழுத்துக்கள் பிராமி எனப்படும் தமிழியில் இருந்து கதம்பம் வட்டெழுத்து நாகரி லத்தீன் என்று பல வடிவங்களில் மாறி நின்றாலும், ஒலிப்புக்கு எழுத்துரு என்ற உலகின் இன்றைய அனைத்து மொழிகளுக்கும் தமிழ் எழுத்துக்களே அடிப்படையாகும்.

அன்னியர் பலர் படையெடுத்து நின்றபோதும், ஆட்சி அதிகாரமின்றி அல்லலுற்ற போதும் தமிழ் தன்னிருப்பை இழந்ததில்லை. தமிழையே தாயாக கோயில் அமைத்து கோபுரத்தில் இருத்தினான் தமிழன். இத்தனை பெருஞ்சிறப்பும் தமிழுக்கன்றி வேறோர் மொழிக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. இப்படி தமிழின் பெருமையையும், அதன் சிறப்பையும் நாள்முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம். 

இப்படி பழம்பெருமை பேசுவது மட்டுமே தமிழர் நம் பெருமையல்ல. பார்புகழ் நம் தமிழை ஞாலம் உள்ளவரை நிலைத்திருக்கச் செய்வதே எம் பிறவிக்கடனும், உண்மையான பெருமையுமாகும்.



Ourhome Div Pictures, Images and Photos

நரேந்திர மோடி பாடல்

 நல்வாழ்வு மலருது 

வரலாறு திரும்புது 

புதிய வடிவில் பழமை பெருமை நினைவில் வருகுது


(தனி: )வரலாற்றைத் தந்தாரே அதை

மீட்டுத் தந்தாரே

நரேந்திர மோடி 

(குழு: )எங்கள்

நரேந்திர மோடி


(தனி:)வரமே வரமே 

எங்கள் தேசத்தின் வரமே

கருப்பசாமி போல வந்த நரேந்திர மோடி 

(குழு:)எங்கள்

நரேந்திர மோடி


(தனி:)பகையே பகையே இனிநீ பறந்துபோவாய்

காவல் தெய்வம் நரேந்திர மோடி வழியே செல்வோம் 

(குழு:)தேச

நலமே வெல்லும்

(வரலாற்றைத்...)


(தனி:)எம் பாரததேசம் அதை மனதினில் சுமந்தே அல்லும் பகலும் நாட்டைக் காக்கும் நரேந்திர மோடி 

(குழு:)எங்கள் நரேந்திர மோடி

எங்களின் தேசம் இனி உலகினில் மின்னும் 

காவல் தெய்வம் நரேந்திர மோடி வழியே செல்வோம் 

(குழு:)தேச

நலமே வெல்லும்

(வரலாற்றைத்..)


(தனி:)அடங்கிக்கிடந்த ராம ஜன்ம

பூமி சிரிக்குது

நாம் கனவில் கூட நினைத்திராத காசி சிறக்குது

(குழு:)சிவபூமி சிறக்குது

ஒடியும் கிளையாய் தொங்கிக் கிடந்த காஷ்மீர் துளிர்க்குது 

(குழு:)அது கிளைகள் பரப்புது

(தனி:) எம் தலைவன் வந்தார் தேசம் எங்கும் மாற்றம் நடக்குது

(குழு:)முன்னேற்றம் நடக்குது

(வரமே வரமே..)


(தனி:)அகண்ட பாரதம் அது தொலைவினிலில்லை

அன்னை பூமி காப்பது எங்கள் பிறவியின் கடமை அதை 

உணத்திய பெருமை.. 

(குழு:)நரேந்திர மோடி எங்கள் நரேந்திரமோடி

(தனி:)அறுப்போம் அறுப்போம் மன விலங்குகள் அறுப்போம் தேசம் காக்க நரேந்திர மோடி வழியே நடப்போம் (குழு:)வரும் பகையினை அழிப்போம்


அமைப்போம் அமைப்போம் அகண்டபாரதம் அமைப்போம்

தேசத்தந்தை நரேந்திர மோடி வழியே நடப்போம் (குழு:)புது வரலாற்றினைப் படைப்போம்

(வரமே வரமே..)



Ourhome Div Pictures, Images and Photos