ஈழம் என்ற பெயரில் ஒரு தேசம் இன்றைய ஈரானின் மேற்குக் கரையில் இருந்ததை யாரேனும் அறிவீர்களா?
பண்டைய அக்காடிய, சுமேரிய, ஆசிரிய பேரசுகளை எல்லையாகக் கொண்டு #ஈழம் என்று ஒரு தேசம் இருந்துள்ளது.
அங்கே பேசப்பட்ட மொழிக்கு #தமிடி என்று பெயர்.
இந்த தமிடி மொழி ஈரானிய பர்சிய மொழியுடனோ ஆசிரிய அக்காடிய மொழிகளுடனோ சம்பந்தப்படாத மொழியாம்.
அம்மக்கள் கறுப்பின மக்களாம்.
அங்கே இப்போ அந்த மொழி தொலைந்து போனாலும் அதன் அயல்நாடான பலுசிஸ்தான் பகுதியில் அதனை ஒத்த மொழியொன்று சிறுகுழுவிடம் உள்ளது.
பின்னர் ஈழ தேசம் மீது சுற்றியுள்ள பேரரசுகள் படையெடுப்பு செய்ததால் அந்த நாடும், அந்த மக்களும், அவர்களின் மொழியும் தொலைந்து போயுள்ளது.
அங்கிருந்த மக்கள் பலர் இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாக கூறுகின்றனர்.
இப்போதும் அப்பகுதியில் கறுப்பின, கலப்பின மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களிடம் அவர்களின் தமிடி மொழி இல்லை. அவர்களின் மதம் இல்லை. அவர்களின் கலாச்சாரம் இல்லை.
ஏதோ மொழிபேசி, யாரோ ஒருவரின் மதத்தை கலாச்சாரத்தை தரித்து அடையாளத்தை தொலைத்த இனமாக வாழ்கிறார்கள்.
நாளைய எம்தலைமுறையின் நிலையும் இதுபோலத்தான் மாறவேண்டுமா??
அடையாளம் காப்போம்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக