முகப்பு

குயில்பாட்டு


கொடிபடர்ந்த கிளையிருந்து விழிபகரும் சேதியென்ன-குயிலேநீ
துணைமறந்து தனியிருந்து மொழிமறந்த கானமென்ன
சொல்லவந்த சோகத்தின் சேதிதன்னை மறந்தாயோ-இல்லை
சொல்லாத சோகத்தின் சோகத்தையே மறந்தாயோ.
Ourhome Div Pictures, Images and Photos

பேருந்து அதிகாரம்

இருக்கை இடங்கொடுத்து இருக்கையில் இருந்தவள்மேல்
இறுக்கையில் இடங்கொடா நன்று.

பெண்காணில் எழுவென்று ஆணெளுப்பி பெண்ணிருத்தின்
பெண்ணென்பள் இயலாப் பொருள்.
 
முன்னறியா ஒருவன்கண்டு கண்டகதை எல்லாஞ்சொல்லின்
உன்கண்மை என்ன பெறும்

பெண்ணிற்கு மட்டு பெருவழிமேல் நோகுமென்னில்
ஆணின்மேல் கல்லென்ன காண்

விழிகளில் விகரம்படர்ந்து உரசலில் உலகம்மறந்து
இழிவதில் என்ன சுகம்.
Ourhome Div Pictures, Images and Photos

வாழ்வு மயக்கம்


சிற்றின்ப மயக்கில் பேரின்பப் பொருள்கொண்டு
சுற்றம்துகில் மறந்து உடைபொருளும்தமைத் துறந்து
குறியொடுகுறி சேர்த்துக் குழவிக்குப் பொருள்சேர்த்து
அறிவொன்றும் அறியாப் பிறந்ததோர் பிறப்பு.

பிறப்புக் கொடியறுத்து உடல்பிரித்து முறைவகுத்து
அப்பனென ஆள்காட்டி அடுத்தவர்க்கும் வகைகாட்டி
சுற்றமும் சாதியும் சூழ்நின்றோர் சிந்தனையும்-இட்டவழி
பெற்றான் பெயர்கொண்டான் நான் என்றான்.

தான்கொண்ட குறிகொண்டு ஆணென்று வகைகண்டு
ஆண்கொள்ளாக் குழிகண்டு பெண்ணென்று நகைகொண்டு
முன்பாலோடும் ஆளோடும் பாரிலுள்ளோர் வகுத்தசட்டம் –தன்
நெஞ்சோடு நிலைசெய்துதன் பின்வாழ்வை பிழைசெய்தான்.

செயலறியாப் பருவத்தே செய்யறியாப் பயிர்போல
மயிலுதிர்ந்த இறகாக மலைசொரிந்த மணலாக
மையலென மனமுதிர்ந்து பார்வையிலே கதைபகிர்ந்து
காதலென வருந்தி கல்பனையை உருத்தரித்தான்.

உருஅறியா உள்ளத்தை மெய்யென்று தினந்தேடி-உள்ளம்
உருக்குலைந்து சிந்னையும்கெட்டழிந்து மாதுக்கு மனமிரங்கி
ஊருக்கும் பழியிறைஞ்சி காதலெனச்சொல்லி காயத்தையும்வருத்தி
போருக்கும் ஆள்செய்தான் பேருக்கும் பாழ்செய்தான்.

பாழான உள்ளமது பார்வைக்கு பழிகிடக்க ஏங்கி மனம்
கீழான பள்ளமதை உள்ளமெச்ச மாயக் குலைக்கேங்கி
மீளாத மனம்நோக கண்நோக்கிக் காத்திருந்து
மெய்வாழ்வை பொய்செய்தான்

Ourhome Div Pictures, Images and Photos

காதல் பொய் மயக்கம்


காதலின் பேர் சொல்லி ஏங்கி மனம் உளைத்து உடைந்தேன்
காகதலின் மயக்கில் நின்று காயத்தையும் தொலைத்தளித்தேன்
சாதலின் முடிவில் சென்று சாத்தியத்தையும் எண்ணத் துணிந்தேன்
வாழ்தலின் பொருளறிந்து பாழ்முறிப்பது என்நாளோ?
Ourhome Div Pictures, Images and Photos