முகப்பு

வட்டு குறள்-கணனி அதிகாரம்


ஈர்எண்ணின் அடிகொண்டும் ஈர்ஐந்து கருவிகொண்டும்

இயங்குவதாம் கணனி என்ப.1


தாய்பலகைநடுத்தொகுதி வன்தட்டுரம்ரொம்மும் எலிவிசைபலகை

மின்வழங்கிதிரையுடன் ஒலிப்பான் பத்தாம்2


அச்சாக்கி வருடலொடு வழங்கி வாங்கியென

புறக்கருவி உண்டாம் பல.3


வன்பொருளும் மென்பொருளும் சேர்ந்தொக்க செயலாற்றும்

அன்றில் செயல்தொக்கும் அது.4


மென்பொருளும் வன்பொருளும் முறையே வகைபிரியும்

மூன்றும் இரண்டும் என.5


இயங்குதளம் பகுப்புறுப்பு பயன்பாட்டு பொருளென்ப

மென்பொருளின் மூன்று வகை.6


தரவுகளை உள்ளெடுக்கும் தரவுகளாய் வெளியிலிடும்

இரண்டும்வன் பொருளின் வகை.7


சடக்கருவி தொகுதிதன்னை அடிப்படையாய் இயங்கவைக்கும்

மென்பொருளாம் இயங்கு தளம்.8


தனித்தனித்த கருவிகளின் செயல்களினை வழிப்படுத்தல்

கருவிப்பகுப் புறுப்பின் செயல்.9


பயன்பாட்டு மென்பொருளாம் பயன்நோக்கி பயன்படுத்தி

செயல்நோக்கம் பெறுவ தெல்லாம்.10

Ourhome Div Pictures, Images and Photos

தமிழ்சித்தன் பாடல்கள்-2

குலம்விட்டுப்போன சதைமயக்கச் சண்டாளி குணம்கெடுத்தாளோ- அவள்

குணம்கெடுத்த சண்டாளன் பெண்டுகள்போல் சொண்டுரசி குணமறுத்தானோ

கால்விழுந்து கைபிடித்து கால்வாரிவிட்டவள்தான் கலக்கிவிட்டாளோ- மனதை

இழிவர்வழி விட்டவர்கள் வாழ்ந்தில்லை மாழ்ந்தென்று மனமுணராயோ!


தனக்குவாய்த்த பெண்டிர் தாசியென்று ஆகிவிடில் -தரணிதனில்

தாசிமட்டும் வேண்டுமென்று தவம்மிக வளபர்ப்பேனோ

தாயொடு தங்கையையும் தாசியென்றும் விழிப்பேனோ-இவர்கள்

உடல்விற்கும் நிலைவருங்கால் என்பெண்டிர் உசத்தியன்றோ!


உடல்விற்கும் பெண்மட்டும் தாசியென்னா வேதம்காண்- தான்

பெண்ணென்று பேதம்சொல்லி பெறும்பேறு அத்தனையும்

வேசியென்று வேதம்சொல்லும் காதலென்றும் அதுதானே

கட்டிலொடு காமங்கொல்லும் காலங்கொல்லாய் காலனே!


தாய்வயிறு பசித்திருக்க தாரத்தொடு புசித்திருப்பேன்

உறவுகள் தவித்திருக்க ஊர்மாடத்து விழாவெடுப்பேன்

உடற்பசிக்காய் குலம்விட்டு குணம்பிறழ்ந்த சண்டாளன் –என்

குணம்மாறும் என்றெண்ணல் எந்ஞாயம் ஞானவோனே?

Ourhome Div Pictures, Images and Photos