பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இந்து மதம் என்பது சைவம் வைணவம் சாக்தம் போன்ற மதங்களை இணைத்த மதத்தின் பொதுவான பெயர் என்று.
ஆனால் உண்மை அதுவல்ல..
இந்திய பண்பாட்டின் ஆன்மீக அறிவின் அடையாளமாக விளங்கும் நால்வேதங்கள் குறிப்பிடும் கடவுள், கடவுளின் மூர்த்தங்கள், தேவர்கள்(ஆதித்தர்கள், வசுக்கள், உருத்திரர்கள்) இவர்களில் யாரோ ஒருவரை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட மதங்களே சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் போன்ற மதங்கள்.
வேதம் கடவுள் என்றோ கடவுளின் மூர்த்தங்கள் என்றோ அல்லது தேவர்கள் என்றோ குறிப்பிடுபவர்களைத்தான் மேற்படி மதங்கள் முழுமுதற் கடவுள் என்றோ முதன்மைக் கடவுள் என்றோ கூறுகின்றன.
வேதத்தில் குறிப்பிடாத ஒன்றை கடவுள் என்று பின்பற்றும் மதங்கள் இங்கு எதுவுமே இல்லை.
வேதம் கூறும் பிரம்மம் தோன்ற ஆதிபராச்கதிக்கு ஆதாரமாக விளங்கும் சிவம்தான் சைவர்களின் முதன்மைக் கடவுள்.
சூரியனின் ஏழு தொழிற்பாட்டு பெயர்களில் ஒன்றானதும், வேதம் கூறும் சக்தியின் அம்சமானதுமான விஷ்ணுவே வைணவர்களின் முதன்மைக் கடவுள்.
வேதம் கூறும் விந்து சக்தியின் மூர்த்தமான முருகனே கௌமாரர்களின் முதன்மைக் கடவுள்.
நாத சக்தியின் மூர்த்தமான விநாயகனே காணபத்தியர்களின் முதன்மைக் கடவுள்.
தேவர்களின் தலைவன் என்று வேதம் சொல்லும் இந்திரனும், ஞானகுரு என்று சொல்லும் தட்சிணாமூர்த்தியுமே பௌத்தர்களின் முதன்மையான கடவுள்கள்.
இப்போது சொல்லுங்கள் பல மதங்களை இணைத்த பொதுப்பெயரா இந்து என்பது? அல்லது
வேதங்கள் கூறும் கடவுள் மூர்த்தங்கள், தேவர்களை வணங்குபவர்களை குறிக்கும் பொதுவான பெயரா "இந்து" என்று...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக