பொங்கல் வருது பொங்கல் வருது
தை தை தைப் பொங்கல் வருது|
பழைய கவலை மறந்து மகிழ
தை தை தைப் பொங்கல் வருது|
ஊரும் உறவும் கூடி மகிழ
தை தை தைப் பொங்கல் வருது|
தை தை தைப் பொங்கல் வருது|
பாதி முற்றம் பூசி மெழுகி
அரிசி மாவு கோலமிட்டு|
அரிசி மாவு கோலமிட்டு|
கும்பம் வைத்து விளக்கேற்றி
தோரணமும் கரும்பும் கட்டி|
தோரணமும் கரும்பும் கட்டி|
கோல நடுவில் அடுப்பு வைத்து
புதுப்பானை அலங்கரித்து|
புதுப்பானை அலங்கரித்து|
பானை நிறைய நீர் ஊற்றி
அதன் மேலே பால் நிரப்பி|
அதன் மேலே பால் நிரப்பி|
மாவிலையும் திருநீறும்
சந்தனமும் சாந்துமிட்டு|
சந்தனமும் சாந்துமிட்டு|
பானை நிறைய பொங்க வருது
தை தை தைப் பொங்கல் வருது|
தை தை தைப் பொங்கல் வருது|
பொங்கிய நீர் எடுத்து தெளித்து
பச்சரிசிப் பயறும் போட்டு|
சர்க்கரையும் பசும்பாலும்
நெய் ஏலம் முந்திரியும்|
சேர்ந்த வாசனை நாவை நனைக்க
தை தை தைப் பொங்கல் வருது|
பொங்கல் பொங்க வெடி வெடித்து
பானை இறக்க வெடி வெடித்து|
பானை இறக்க வெடி வெடித்து|
இலை பரப்பி படையல் வைத்து
உரித்த பழத்தை பரப்பி வைத்து|
உரித்த பழத்தை பரப்பி வைத்து|
உயிர் வாழ உணவு தந்து
உதவியநல் உழவர் வாழ்க..|
உலகம் தந்து உயிரும் தந்த
சூரியனார் புகழ் வாழ்க...|
என்று சொல்லி போற்றி மகிழ
நன்றியுடன் வணங்கி மகிழ|
நன்றியுடன் வணங்கி மகிழ|
பொங்கல் வருது பொங்கல் வருது
தை தை தைப் பொங்கல் வருது|
தை தை தைப் பொங்கல் வருது|
ஊரும் உறவும் சேர்ந்து நிற்போம்
நன்றியுடன் வாழ்ந்திருப்போம்|
படைத்த பொங்கல் பகிர்ந்து உண்போம்
பண் பாடுகாத்தல் மேன்மை என்போம்|
பண் பாடுகாத்தல் மேன்மை என்போம்|
பொங்கல் வருது பொங்கல் வருது
தை தை தைப் பொங்கல் வருது|
பழைய கவலை மறந்து மகிழ
தை தை தைப் பொங்கல் வருது|
ஊரும் உறவும் கூடி மகிழ
தை தை தைப் பொங்கல் வருது|
ஊரும் உறவும் கூடி மகிழ
தை தை தைப் பொங்கல் வருது|

0 கருத்துகள்:
கருத்துரையிடுக