குமரப்பா குமரப்பா எங்கே போகிறார்?
குலதெய்வம் கோயிலுக்கு கும்பிடப் போகிறார்
குறைவில்லா நல்வாழ்வை வேண்டப் போகிறார்
கனகையா கனகையா எங்கே போகிறார்?
காவல் தெய்வம் கோவிலுக்கு கும்பிடப் போகிறார்
மடைகொடுத்து மனைகாக்க வேண்டப் போகிறார்
இளையதம்பி இளையதம்பி எங்கே போகிறார்?
இஷ்ட தெய்வம் கோயிலுக்கு கும்பிடப் போகிறார்
இடர் நீங்கி இன்ப வாழ்வை வேண்டப் போகிறார்
முனிசாமி முனிசாமி எங்கே போகிறார்?
ஈஸ்வரனார் கோயிலுக்கு கும்பிட போகிறார்
பிறப்பறுத்து முக்திநிலை
வேண்டப் போகிறார்
குலதெய்வம் காவல் தெய்வம் நாமும் வேண்டுவோம்
இஷ்ட தெய்வம் கடவுள் என்று நாமும் வணங்குவோம்
குறைவில்லா பெருவாழ்வு நாமும் வாழவே காலை மாலை தவறாமல் கோயில் செல்லுவோம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக