பச்சைக் கிளியே பறந்து வா
பாலும் பழமும் நான் தருவேன்
இயக்கர் மலையை கடந்து வா
இறுங்கும் பொரியும் நான் தருவேன்
பூதர் புதரைக் கடந்து வா
புதிரும் கதிரும் நான் தருவேன்
நாகர் நகரைக் கடந்து வா
நெல்லும் சோறும் நான் தருவேன்
பச்சைக் கிளியே பறந்து வா
பாலும் பழமும் நான் தருவேன்
பச்சைக் கிளியே பறந்து வா
சிறைகை விரித்துப் பறந்து வா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக