வெள்ளிக் கிழமை கல்லெறியின் சனிக்கிழமை
கல்கல்லாய் உதிருமுன் வீடு. 1
கல்கல்லாய் உதிருமுன் வீடு. 1
கல்லறியார் கல்லெறியின் எறிந்தவன்தன் வீடு
கல்கல்லாய் ஆகும் நாளை 2
கல்கல்லாய் ஆகும் நாளை 2
கலவரத்தைச் செய்து நிலவரத்தை நீமாற்றில்
நாளை காளைத்திகைப்பான் வரும் 3
நாளை காளைத்திகைப்பான் வரும் 3
அறுவார் உசுப்பேற்றி அறியாமல் நீயெறிந்த
கல்லாக மாறுமுன் வீடு 4
கல்லாக மாறுமுன் வீடு 4
எறிவர் மகிழ்வர் கலம்செய்து களித்திருப்பர்
மறுநாளே மனம் வருந்துவர் 5
காளைத் திகைப்பான் வேலை தொடங்குகையில்
கலங்கிவிடும் கலவரன் மனம் 6
கலங்கிவிடும் கலவரன் மனம் 6
கலவரன் வீடு கல்லாகும் என்றறியின்
கல்தொடவே கைகள் நடுங்கும் 7
கல்தொடவே கைகள் நடுங்கும் 7
கலகத்தைத் தூண்டி சிதைத்தவன் சொத்தெதுவோ
ஏலத்தே ஏறி விடும் 8
ஏலத்தே ஏறி விடும் 8
கலவரம் செய்துவிட்டு மனதளவில் மகிழ்ந்தநாளை
காளைத் திகைப்பான் வரும் 9
காளைத் திகைப்பான் வரும் 9
காளைத் திகைப்பான் காலனாய் வராதிருக்க
கலகங்கள் செய்யா இரு 10
கலகங்கள் செய்யா இரு 10
(அருஞ்சொல்: காளைதிகைப்பான்-புல்டோசர்)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக