முகப்பு

ஈழத்தமிழர் யார்?

நான் தமிழகத்தில் நீண்டகாலம் இருந்தவன் என்ற வகையில் தமிழகத்தின் பல பாகங்களுக்கும் சென்று அங்குள்ள கல்விமான்களையும்(மான்கள் மேயும் போது), அறிவாளிகளையும்(அறிவை ஆழிக்குள் வைத்துவிட்டு வெறுமையாக இருப்பவர்கள்), அரசியல் வியாதிகளையும் மன்னிக்கவும் வாதிகளையும் சந்தித்திருக்கிறேன். அப்படி சந்தித்து பேசும் போதெல்லாம் நான் ஈழத்தமிழன் என்ற காரணத்தால் ஏதாவது ஒரு வகையில் ஈழம் தொடர்பான பேச்சு வந்துவிடும். அப்போது அவர்களின் பேச்சில் காணப்படும் ஈழம் தொடர்பான அறிவை கண்டு வியந்திருக்கிறேன். ஆமாங்க அவ்வளவு அறியாமையோடு பேசுவார்கள். அப்பொழுது அவர்களுக்கு விளக்கஞ் சொல்லியே நான் மாய்ந்து போயிருக்கிறேன். எனவேதான் வலைப்பதிவை படிப்பவர்களாவது கொஞ்சமாவது இலங்கையில் உள்ள தமிழர் பற்றி அறியும் நோக்கில் இப்பதிவை போட எண்ணினேன்.

நான் சந்தித்த பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு விடையை இப்பதிவில் இடுகிறேன்.
இலங்கை சிங்களவர்களின் நாடு, இங்கிருந்து பிழைக்கப்போன இடத்தில் பிரச்சனை பண்ணினால் சிங்களவன் சும்மா இருப் பானா?
இது பலரும் என்னிம் கேட்கும் கேள்வி...

இலங்கையில் பிழைக்க வந்த தமிழன் பிரச்சனை பண்ணவில்லை அவன் இந்திய தமிழனுக்கே உரிய அடிமைத்தனத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக கொத்தடிமையாகவே இலங்கையின் மத்திய மலைநாட்டின் தேயிலைத்தோட்டங்களில் அடிமைப்பட்டுக்கிடக்கிறான். உரிமை வேண்டி போராடுபவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியை தமது தாயகமாக கொண்டு வரலாற்று காலந் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள்.

ஆம், இலங்கையில் இரு வேறுபட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
1.இலங்கையை தமது பூர்வீக தாயகமாகக் கொண்ட தமிழர்கள், இவர்களே தம்மை மற்ற தமிழர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட தம்மை ஈழத்தமிழர் என அழைக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

2.இந்திய வம்சாவழித் தமிழர்கள், இவர்கள்தான் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டில் இருந்து கூலித்தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததியினர். இந்திய வம்சாவழியினர் என்று கூறுவதை அவமானமாகக் கருதும் இவர்கள் தம்மை மலையகத்தமிழர்கள் என்று அழைக்கின்றனர்.இவர்கள் இலங்கையின் மத்தியமாகாணத்தில் நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். கணிசமான அளவினர் தலைநகர் கொழும்பிலும் வசிக்கிறார்கள். கொழும்பில் வசிக்கும் இந்திய தமிழர்களில் கூலித்தொழிலாளர்களாக வந்தவர்கள் மட்டுமல்லாது வியாபாரிகளாக வந்தவர்களும் அடக்கம்.

இவர்களைத் தவிர இராசராச சோழனின் படையெடுப்புடன் இலங்கையில் குடியேறிய சோழனின் படைக்குடிகள் அனுராதபுரம்,பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் இன்னும் சிறிதளவு மக்கள் தமிழர்களாகவே வாழ்கிறார்கள்.
சிலர் முன்னர் ஏற்பட்ட கலவரங்களில் இடம்பெயர்ந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர், பலர் சிங்களவர்களாக மாறி விட்டனர்.

இப்பதிவு இலங்கையில் உள்ள தமிழர் பற்றிய அறிமுகம் மட்டுமே, உங்களின் ஆதரவைப் பொறுத்து தொடர்ந்து எழுதுவேன், கருத்தை பின்னூட்டத்தில் இடுங்கள். மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்.
Ourhome Div Pictures, Images and Photos

2 கருத்துகள்:

புலிப்படை சொன்னது…

றொம்ப சரி பா

ஈழத்தமிழன் சொன்னது…

இலங்கையில் தமிழர் வந்தேறியவர்கள் அல்லர் காலாகாலம் வாழ்ந்தவர்கள். அண்ணனுக்கும் தங்கைக்கும் பிறந்தவர்களே இங்கு வந்தேறியவர்கள்...