ஏங்க வள்ளுவரும் ஔவ்வையாரும் தான் குறள் எழுதலாம் மற்றவங்க யாரும் எழுத கூடாதுன்னு ஒன்னும் பிரச்சனை இல்லையே... அதால நான் செய்த முதற் குறள் முயற்சி, எழுதி நீண்ட நாள் ஆயிற்று ஆனா பதிவில போடலை. இப்ப போடுறன் படிச்சிட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க......
குறிபார்க்கா எய்த அம்பினை ஒத்த
எண்ணா எடுத் துரைப்ப.                                                        1
இடம் கொடின் நன்மை கடிதாம்
எண்ணம் தீது எனின்.                                                                2
தவறென்று காண் இன்கூற வஞ்சேல்
தீதற்ற சொல் ஆல்.                                                             3
வெறுமை கண்டு உழல் உம்வாழ்க்கை
உடன் நலன் கெடின்.                                                              4
வரல் வேண்டுசொற்கள் வாயிருந் தல்ல
இதயத்து இல் இருந்து.                                                         5
துன்பத்திற் துன்பம் துன்பம் தனையெண்ணி
உள்ளத்துட் தோன்று பயம்.                                               6
உள்ளத்து வலிமை கூட்டு துன்பம்
உழைப்ப துடலை ஒப்ப.                                                       7
உழைப் பன்றி யில்லை யார்க்கும்
எங்கு முழு வெற்றி.                                                               8
அளிக்கு முறை மிக்க மதிப்புடை
அளிக்கு பொருள் இலும்.                                                             9
மக்கட்கு மாறுநீ தொண்டனாய் ஆவர்
அவ்வா ஏயவர் உனக்கு.                                                        10
பிறர்க் குணர்த்தும் தமை தாமவர்கட்கு
செய்யும் செயல் நின்று.                                                       11
உடை நடைபண்பு மூன்று சிறந்தது
எளிமை அதன் இலும்.                                                       12
சதுரங்கம் போல வெற்றி தருமுன்
எண்ணம் நல்வாழ் இல்.                                                               13
பெரியோர் பெருந் தன்மைகாண் எளியோரை
நடத்து அவர் தன்மை.                                                          14
திறமை வெல் ஆற்றல்நிலை ஆன
பயில் தனிற் குண்டு.                                                               15
எண்ணுவர் எண்ணத்து பொருள் தரு
மவர் செய்யும் செயல்.                                                            16
துணிவு வீரம் அறிவொக்க தரும்
தேர்ந்த தன்முன் முயற்சி.                                                            17
துன்பத்தில் இன்பம் கொள்ளல் என்ப
இயல் ஆவோர் செயல்.                                                       18
எண்ணம் களைதல் இன்பம் பயக்கும்
தேவை அற்ற தெனின்.                                                           19
நல்லோர் உளமென்ப வேண்டு நிலைத்த
கறையற்ற கண்ணாடி ஒப்ப.                                              20
தானே தான் நிற்கை நன்று
அவன் தன் பலத்து.                                                                   21
பொருள் சிறிதுடையார் வறியர் அல்லர்
மிகு பொருள் வேண்டுவரே.                                                22
நல் தொழிலான் ஆக்குவதாம் அவனை
தான் கற்ற கல்வி.                                                                      23
கல்லென்ப கடிததனில்  கடிதுகற்ற கல்
அதை மறப்ப தென்ப.                                                              24
தாமெதுவாய் இருப்ப தென்பதாம் தம்
மெய்ச் செல்வ மென்ப.                                                            25
எப்பழக்க முஞ்சிலந்தி வலையாம் முதல்
இரும்பாகு மது பின்.                                                                26
வெல் சொல்லில் தேர்ந்தான் வழக்குரைஞன்
அவனில் தேர்ந்த்து பணம்.                                                          27
மாற்றனை விட தீயன் திருடன்
பொய்யன் அவன் இலும்.                                                              28
உழைப்பு ஊக்கம் உயர்வுதரும் அன்றி
வீண்ஆ யின்காலம் இழப்ப.                                                 29
போதளவு கற்றவர் நல்வாழ் வாழ்வர்
மற்று அவர் கல்லாதார்.                                                         30
செய்யெண்ணு செயலை உடன்செய் நன்று
நன்றன்று செய்யா இரு.                                                         31
வெற்றியது எளிது ஒன்றாகி விட்டால்
சிந்தை உடன் செயல்.                                                              32
எண்ணு செயல் கைகூடும் செயற்பட்டால்
காலம் பலம் அறிந்து.                                                               33
சிந்தித்தல் நன்மைதரும் பிறர் கூறுமேன்மை
அறி வுரை கேட்டு.                                                                  34
இகவாழ்வு அடை இன்பம் என்ப
மேகத்து நிழல் ஒப்ப.                                                             35
துன்பத்து துணிச்சல் கொள் தோழன்
தோன்றி இருப்ப தந்தலை.                                                            36
அறிவாளன் முதலில் செய்து இருப்பன்
மூடன் செய் ஈற்று.                                                                     37
திறனொடு நம்பிக்கை உள்ளுள்ளன் வெல்லரிய
படையுடை நாட்டிற்கு ஒப்ப.                                               38
இருவிழி அழுக்கினை அழுக்கற நீக்கின்
இருப்பவை எல்லாம் அழகு. 39
புயலினிற் கசையா நிலந்தொடு பெருமலை
புகழ்தனிற் கவ்வாறே அறிவு. 40
மேலுள்ள 40 குறள்களும் தமிழன்பன் எனப்படும் வருண்ஜீவ் ஆகிய என்னால் எழுதப்பட்டு பதிப்புரிமை பெறப்பட்டது..