இருக்கை இடங்கொடுத்து
இருக்கையில் இருந்தவள்மேல்
இறுக்கையில் இடங்கொடா
நன்று.
பெண்காணில் எழுவென்று
ஆணெளுப்பி பெண்ணிருத்தின்
பெண்ணென்பள் இயலாப்
பொருள்.
முன்னறியா
ஒருவன்கண்டு கண்டகதை எல்லாஞ்சொல்லின்
உன்கண்மை என்ன பெறும்
பெண்ணிற்கு மட்டு பெருவழிமேல்
நோகுமென்னில்
ஆணின்மேல் கல்லென்ன
காண்
விழிகளில்
விகரம்படர்ந்து உரசலில் உலகம்மறந்து
இழிவதில் என்ன சுகம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக