வெறித்த பார்வையும் வெட்கித்த புன்நகையும்
சிரிப்பிழந்த இதழ்கழும் சீழ்விழுந்த சிந்தனையும்
போவென்ற மனத்தை வாவென்று இழுக்கும் பெருந்துயரும்
ஏதுக்கிவை இறைவா இனுங்கிடந்து உழன்றிடவோ.?
மரணத்தின் பால்பாக்கின் பாலென்ன தோலென்ன
என்ரணத்தின் காயமென்ன காயத்தின் மாயமென்ன
காரணமும் தெரியவில்லை ஏரணமும் புரியவில்லை
பூரணத்தை நீஉணர்தின் நானறியேன் பராபரமே.
பார்வைமங்கி பாதம்தடுக்கிப்பின் பல்லும்கழன்று சொல்லும்தளருமாக்கால்
முன்னைஎண்ணி எண்ணங்கலங்குவனோ இல்லைஎந்தன் இன்றைவருந்துவனோ
காலக்கதைமுடித்து காலன்கவரவருநாளைநிதம்நினைந்து நாளைச்சிதைப்பேனோ
சாவென்னைகொன்று வாழ்வுகொண்டுபோகுமுன்னே வாழ்வென்னை கொன்றுபோமோ.
