எனக்குள்ளே ஒருவனல்லலன் பலருள்ளன் அவற்றில் ஒருவன் தமிழ்ச்சித்தன், அவன் எழுதிய பாடல்களில் சில.....
கழுத்திறக்க சட்டையிட்டு கைவைத்து மறைத்து
கால்குட்டை சட்டைபோட்டு கைப்பையால் மறைத்து
இடைதெரிய உடைஉடுத்தி இழுத்திழுத்து விட்டு
இவைசெய்யும் செயல்என்ன பரத்தமையோ பராபரமே! 1
எச்சில்தசை தனைப்பகிர்ந்து முத்தமென்று முயங்குகின்றார்
கழிகுழியில் கால்நனைத்து கலவியென்று கலங்குகின்றார்
நீர்த்தசையில் நினைவிழந்து நிலைகெட்டு நிற்குகின்றார்
சீர்த்திசையில் செயல்உணரும் நாள்என்ன நமன்நாளோ? 2
பெண்பேச்சில் பேதலித்து பேதமைகள் மிகவளர்த்து
நல்கூட்டம் தனைவிடுத்து நாரியர்பின் நலிந்துழன்று
பரத்தமைக்கு பாழாகும் சதைமயக்கச் சண்டாளர்- நாளை
மதிதெளிந்து மனங்கலங்கி தமைநோகாரோ தாண்டவனே! 3
கற்பென்றும் கண்மையென்றும் காலிடுக்கில் கதைசொல்லுவார்
கண்ணறியா கற்புகொல்லும் கடவுளையும் வெல்லுமென்பார்
கண்மூடி கருத்தேற்றா கடைந்தெளிந்து சொல்லுமாக்கால்
கவட்டிடுக்கில் கற்பில்லை கப்பொன்றே மெய்யென்பேனே! 4
இடைகாட்டி மயக்கிடுவார் திரண்டுருண்ட தொடைகாட்டி மயக்கிடுவார்
நடைகாட்டி மயக்கிடுவார் திரள்கொங்கை மடைகாட்டி மயக்கிடுவார்
கண்காட்டி கதைபேசி தோல்காட்டி விலைபேசி மயக்கிடுவார்மயங்கிடுவார்
உடன்கொண்ட இளமை உடல்விட்டுபோகின் பின்என்செய்வார் பரனே? 5
