இந்துசமயத்தை எதிர்ப்பதன் பெயர்தான் நாத்திகமா?
பகுத்தறிவின் பெயரால் பகுத்தறிவற்ற சில மூடர்களால் பலகோடி இந்துக்களின் மனம் புண்படுத்தப்படுகின்றது. இவர்களின் பகுத்தறிவுப் பசப்பல்கள் தாங்க முடிவதில்லை.
இங்குள்ள பகுத்தறிவற்ற ஒரு தலைவரின் தொலைக்காட்சில் பக்ரித் தின சிறப்பு நிகழ்ச்சி போடுவார்கள், கிறிஸ்மஸ் தின சிறப்பு நிகழ்ச்சி போடுவார்கள், ஆனால் இந்துப் பண்டிகைகளான விஜயதசமி, வினாயகர்சதுர்த்தி, தீபாவளி, போன்ற தினங்களில் மட்டும் விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சி போடுவார்கள். அன்று வினாயகர் சதுர்த்தியென்றோ, தீபாவளியென்றோ சிறப்பு நிகழ்ச்சி போட்டால் அவர்களது பகுத்தறிவிற்கு பங்கம் வந்துவிடுமாம் (சிறப்பு நிகழ்ச்சியே போடாவிட்டால் விளம்பர வருவாய்க்கு பங்கம் வந்துவிடும்).
இவர்கள் ஏன் இப்படி செய்யமாட்டார்கள்.. இருக்கும் இந்துக்கள் எல்லாம் கேனத்தனமாய் இப்படிப்பட்டவர்களுக்கு வாக்குப்போட்டு ஆட்சியில் அமரவைத்தால் இதுவும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்.
